PM Modi to visit Laos, attend East Asia Summit and ASEAN summit
PM Modi's Laos visit aims to enhance India's physical and digital connectivity with southeast Asia
PM Modi to hold bilateral level talks with world leaders on the sidelines of ASEAN and East Asia Summits
ASEAN is a key partner for our Act East Policy, which is vital for the economic development of our Northeastern region: PM Modi

லாவோஸ் தலைநகர் வியன்டியானில் செப்டம்பர் 7, 2016, செப்டம்பர் 8, 2016 ஆகிய நாட்களில் நடைபெறும் 14-வது ஆசியான்-இந்தியா மாநாடு, 11-வது கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார்.

இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

14-வது ஆசியான் – இந்தியா மாநாடு மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக லாவோஸ் குடியரசின் வியான்டியான் நகருக்கு செப்டம்பர் 7-8, 2016-ல் பயணம் மேற்கொள்ள உள்ளேன். இந்த மாநாடுகளில் நான் மூன்றாவது முறையாக கலந்துகொள்ள உள்ளேன்.

நமது கிழக்கு நாடுகள் கொள்கையில் ஆசியான் முக்கிய கூட்டாளியாக உள்ளது. இது நமது வடகிழக்கு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. நமது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வலுப்படுத்தவும், இந்தப் பிராந்தியத்துக்கு ஏற்பட்டுள்ள பாரம்பரியமான மற்றும் புதிய வடிவிலான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளவும் ஆசியான் அமைப்புடனான நமது பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கியமானது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்கு முக்கிய வாய்ப்பாக கிழக்கு ஆசிய மாநாடு அமைகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான நமது நல்லுறவு உண்மையிலேயே வரலாற்றுப்பூர்வமானது.
நமது ஒத்துழைப்பு மற்றும் நிலைப்பாட்டை ஒரே வார்த்தையில் இணைப்பு என்று குறிப்பிடலாம். நமது நாடுகளுக்கு இடையேயான இணைப்பு மற்றும் தொழில்நுட்ப இணைப்பை வலுப்படுத்த நாம் விரும்புகிறோம். மேலும், மக்களுக்கு இடையேயான இணைப்புகள், பல்வேறு அமைப்புகளுக்கு இடையேயான இணைப்புகள், ஒருவருக்கு ஒருவர் இணைக்கப்பட்ட நவீன உலகம் ஆகியவற்றை வலுப்படுத்துவதன் மூலம், நமது அனைத்து மக்களும் பரஸ்பரம் பயனடைய வேண்டும் என்று விரும்புகிறோம்.

இந்தப் பயணத்தின்போது, மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசும் வாய்ப்பு உள்ளது. அப்போது, பரஸ்பரம் பயனுள்ள இருதரப்பு விவகாரங்கள் குறித்து தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவேன்.