Group of Secretaries present ideas for transformative change in different areas of governance
Secretaries to GoI present ideas on science and technology, energy and environment to PM Modi

பல்வேறு துறைகளின் ஆளுமையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு இந்திய அரசின் மூன்று குழுக்களைச் சேர்ந்த செயலாளர்கள் செயல்விளக்க ஆலோசனைகளை வழங்கினர்.

குடிமக்களை மையமாகக் கொண்டு சேவைகளை வழங்குவது, டிஜிட்டலை புகுத்துதல், புத்தாக்கம், சட்டங்களை எளிதாக்குதல் போன்ற விவகாரங்களில் ஆளுமை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், வாய்ப்புகளை மேம்படுத்துவது, கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை கிடைக்கச் செய்தல்; வேலைவாய்ப்புகள் மற்றும் புதிய தொழில்களை தொடங்குதல்; மற்றும் அறிவியல் செய்வதை எளிதாக்குதல் ஆகிய விவகாரங்களில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் குறித்த செயல் விளக்கத்தில், பல்வேறுபட்ட எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பு தொடர்பான பரிந்துரைகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், நித்தி ஆயோக் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

திட்டமிடப்பட்ட 9 வகையான செயல்முறை விளக்கங்களில், தற்போதைய கூட்டத்தில், 4 விளக்கங்களில் பல்வேறு ஆளுமை தொடர்பான விவகாரங்கள் இடம்பெற்றன.