UK Secretary of State for Foreign & Commonwealth Affairs, Mr. Boris Johnson meets the PM

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. போரிஸ் ஜான்சன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

நவம்பர் 2015 ல் தனது இங்கிலாந்து பயணத்தின்போது, லண்டன் மேயர் ஆக இருந்த திரு. ஜான்சனுடன் நடைபெற்ற சந்திப்பை நினைவு கூர்ந்த பிரதமர், அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டதையொட்டி வாழ்த்து தெரிவித்தார்.

நவம்பர் மாதம் 2016 இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணம், வருங்காலத்தில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை உணர்த்தி உள்ளது என்று பிரதமர் கூறினார்.

இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுபடுத்தும் வகையில் பல்வேறு துறையில், குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நிதி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பிரதமர் பாராட்டினார்.

இங்கிலாந்தில் வாழும் இந்திய மக்கள், இரு நாடுகளுக்கும் வாழும் பாலமாக உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இது மக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்த முக்கிய தூண்டுகோலாக உள்ளது. இந்த உறவை மேம்படுத்த, இரு தரப்பும் தொடர்ந்த செயல்படும் என்று நம்புவதாக பிரதமர் கூறினார்.