US Congressional Delegation calls on the Prime Minister
PM Modi shares India's commitment to further strengthen ties with the US

ஐக்கிய அமெரிக்க சட்டமன்றத்தின் இருகட்சி சார்ந்த 26 பிரமுகர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினர்.

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள சட்டமன்ற பிரதிநிதிகளை பிரதமர் வரவேற்றார். புதிய ஐக்கிய அமெரிக்க அரசும் நாடாளுமன்றமும் பொறுப்பேற்றுள்ள இந்த தருணத்தில் இருதரப்பு பரிமாற்றத்திற்கு இந்த பயணம் நல்ல தொடக்கம் என்று பிரதமர் கூறினார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் தான் மேற்கொண்ட உரையாடலை நினைவு கூர்ந்த பிரதமர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வலுவடைந்து வரும் இந்திய-அமெரிக்க உறவினை மேலும் வலுப்படுத்த தாங்கள் மேற்கொண்ட உறுதியையும் நினைவு கூர்ந்தார். இது தொடர்பாக, இந்தியா-அமெரிக்க உறவிற்கு வலுவான ஆதரவு அளித்து வரும் சட்டமன்றத்தின் இருகட்சிக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளும் எந்தெந்த துறைகளில் இன்னும் நெருக்கமாக இணைந்து பணிபுரிய முடியும் என்ற தனது கண்ணோட்டத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டார். இரு நாடுகளின் வளங்களை செழிக்க செய்து இரு நாட்டு மக்களிடையேயான உறவினை மேலும் வலுப்படுத்துதலும் இதில் அடங்கும். இது தொடர்பாக, அமெரிக்க பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் மேம்பாட்டில் இந்திய திறன் பணியாளர்கள் வகிக்கும் பங்கினை பிரதமர் எடுத்துரைத்தார். விளைவுகளை ஏற்படுத்தும் சீரான தொலை நோக்கு பார்வை உடைய திறன்மிக்க வல்லுநர்களின் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.