Eight-member delegation of British Parliamentarians meets PM Modi
The relations between India and UK have strong bipartisan support in both countries: PM
India and UK are natural partners in the global fight against terrorism: PM

இங்கிலாந்தை சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான உறவு இரு நாடுகளின் மக்களின் வலுவாவன ஆதரவினால் மேலும் வலுவடைந்துள்ளது என்று பிரதமர் கூறினார். மேலும் இரு நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேம்பட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

2015-ஆம் ஆண்டு தான் இங்கிலாந்திற்கு மேற்கொண்ட பயணத்தையும் 2016-ஆம் ஆண்டில் இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே இந்தியாவிற்கு வருகை தந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். 2017-ஆம் ஆண்டின் கொண்டாட்டம் இந்தியா-இங்கிலாந்து கலாச்சார ஆண்டாக இருக்கவேண்டும் என்று பிரதமர் வரவேற்றார்.

தீவிரவாதத்திற்கு எதிரான உலக போராட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் இயற்கை பங்குதாரர்கள் என பிரதமர் கூறினார். மேலும், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக இரு நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.