India is today the world’s fastest growing large economy: PM Modi
Our policies are focussed on improving India’s long term economic and social prospects, rather than on short term headlines: PM
While the global economy is going through a period of uncertainty, India has shown tremendous resilience: PM
Foreign Direct Investment in India was at the highest level in 2015-16, at a time when global FDI has fallen: PM Modi
Hydrocarbons will continue to play an important part in India’s growth: PM Narendra Modi
As a responsible global citizen, India is committed to combating climate change, curbing emissions & ensuring a sustainable future: PM
Energy sustainability, for me, is a sacred duty. It is something India does out of commitment, not out of compulsion: PM Modi
To make India a true investor friendly destination, we have come up with a new Hydrocarbon Exploration and Production Policy, says PM
My message to global hydrocarbon companies is: We invite you to come and Make in India, says PM Modi
Our commitment is strong and our motto is to replace Red Tape with Red Carpet: PM Narendra Modi

எனது சகா திரு. தர்மேந்திர பிரதான் அவர்களே,

வெளிநாட்டு எண்ணெய்-எரிவாயுத் துறை அமைச்சர்களே,

ஹைட்ரோகார்பன் தொழில்களின் மேலதிகாரிகளே, வல்லுநர்களே,

மதிப்பிற்குரிய விருந்தினர்களே, பெரியோர்களே, தாய்மார்களை,

பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பொருளாதார மேம்பாட்டின் பலன்கள் சமூகத்தின் அடித்தளத்தைச் சென்றடைய நீடித்த, நிலைத்த, உரிய விலையுடன் கூடிய எரிசக்தி மிக முக்கியமானது. இன்னும் பல ஆண்டுகளில் எரிசக்தித் தேவைக்கு  ஹைட்ரோகார்பன்கள் மிகவும் முக்கியமான ஆதாரமாகத் திகழ  இருக்கிறது. எனவே, இக்கூட்டத்தின் பொருளாக உள்ள “எதிர்கால எரிபொருள் தேவைக்கு ஹைட்ரோகார்பன் – தெரிவுகளும் சவால்களும்” என் தலைப்பு இந்தத் தருணத்திற்கு உரியதும் பொருத்தமானதும் ஆகும்.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இந்த வளர்ச்சிக்கு அடுத்தடுத்து உருவாகும் பொருளாதார நடவடிக்கைகள் உறுதுணையாக இருக்கின்றன. எங்களது கொள்கைகள் இந்தியாவின் சமூக பொருளாதார முன்னேற்றம் குறுகிய காலம் செய்தித் தலைப்புகளாக மட்டும் இருப்பதற்குப்பதிலாக நீண்டகாலம் நிலைத்திருப்பதை இலக்காகக் கொண்டுள்ளன. நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பொருளாதார வளர்ச்சி, மேம்பாட்டில் பலனைத் தந்துகொண்டிருக்கின்றன.

எங்களது பொருளாதாரம் வேகமான வளர்ச்சி காண்பது ஒரு புறம் இருக்க, மற்றவர்களை விட நிலையானதாகவும் இருக்கிறது. உலகப் பொருளாதார நிலையில் ஸ்திரத்தன்மை இருக்கும்போது, இந்தியாவில் அதை எதிர்கொண்டு சமாளிக்க முடியும் என்று காட்டியது. நமது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மெல்ல மெல்ல சீராகி வருகிறது. நடப்பு பத்தாண்டுகளிலேயே மிகக் குறைவான நிலையைக் கடந்த ஜூன் மாதம் வரையான காலாண்டில்  எட்டியது. உலக அளவில் அந்நிய நேரடி முதலீடு குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 2015-16ம் ஆண்டில் அதிகபட்ச நிலையை அடைந்தது.  உலக அளவில், இந்தியாவில்தான் வங்கித் துறைக்கான பாதிப்பு மிகவும் குறைவு என்று சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி தெரிவித்துள்ளது.

2040-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் ஐந்து மடங்கு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2040ம் ஆண்டு வரையில் உலக அளவில் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையில் கால் பங்கினை இந்தியா அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2040ல் மொத்த ஐரோப்பிய நாடுகளையும் விட அதிகமான எண்ணெயை இந்தியா பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் பொருள் உற்பத்தி விகிதம் தற்போது 16 சதவீதம் உள்ளது. இது 2022ம் ஆண்டில் 25 சத வீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைப் போல், போக்குவரத்துக் கட்டமைப்பு பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வாகனங்களின் எண்ணிக்கை 1.3 கோடியாக உள்ளது. இது 2040ம் ஆண்டில் 6.5 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்து சேவையைப் பொருத்த வரையில், இந்தியா எட்டாவது பெரிய சந்தையாக இருக்கிறது. இது 2034 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியால், 2040ம் ஆண்டில் விமான எரிபொருள் தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவையெல்லாம் எரிசக்தி தேவையை அதிகரிக்கும்.

நண்பர்களே,

இந்த நிலையில், எரிபொருள் பயன்பாட்டில் ஹைட்ரோகார்பன் மிக முக்கியப் பங்கை வகிக்கும். இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு எரிசக்தித் துறையைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. இது குறித்து விவாதிக்க இந்தியாவிலிருந்தும் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வந்து இங்கு பங்கேற்பது குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அனுபவம், திறமை ஆகியவற்றால் ஒவ்வொருவரும் பயன்பெறுவோம் என்று உறுதியாக நினைக்கிறேன். ஹைட்ரோகார்பன் துறையில் என்னவெல்லாம் எதிர்பார்க்கப்படுகின்றன என்பது குறித்தும் எரிசக்தி பாதுகாப்பை அடைவதற்கான முயற்சிகள் தொடர்பாகவும் எனக்குத் தோன்றும் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

எதிர்கால இந்தியா குறித்த எனது தொலைநோக்குப் பார்வையில், பொதுவாக எரிசக்தியும், குறிப்பாக ஹைட்ரோகார்பன் எரிபொருளும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ஏழை எளியவர்களுக்கும் கிடைக்கும் வகையிலான எரிசக்தி தேவையாகிறது. எரிசக்தி ஆற்றலைத் திறம்படக் கையாள்வதும் அவசியமாகும். பொறுப்பான நாடு என்ற வகையில் இந்தியா பருவ மாற்றத்தைச் சமாளிப்பது, மாசினைக் கட்டுப்படுத்துவது, நீடித்த உறுதியான எதிர்கால வளர்ச்சி ஆகிய விஷயங்களில் உறுதியாக உள்ளது.

உலக அளவில் நிலையற்றத் தன்மை இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு எரிசக்தி பாதுகாப்பு தேவையாக இருக்கிறது. எனவே, எதிர்கால எரிசக்தித் தேவை குறித்த எனது தொலைநோக்குப் பார்வையில் நான்கு முக்கிய அம்சங்கள் உள்ளன:

எரிசக்தியை எளிதில் பெறுவது

எரிசக்தித் திறன்

நீடித்த எரிசக்தி

எரிசக்திப் பாதுகாப்பு

எளிதில் எரிசக்தியைப் பெறுதல் என்பதிலிருந்து தொடங்குகிறேன். நாட்டில் எரிசக்தி சேமிப்புத் திறன் கொண்ட கார்களை சில பணக்காரரர்கள் வைத்திருக்கும்போது, ஏராளமான ஏழைகள் விறகுகளையே சமையல் அடுப்புகளுக்குப் பயன்படுத்தும் நிலை இருக்கிறது. இப்படி விறகுகளையும் இதர உயிரி பொருட்களையும் எரிபொருளாகப் பயன்படுத்துவது கிராமப்புறப் பெண்களின் உடல்நலத்துக்கு ஊறு விளைவிக்கின்றன. மேலும், உற்பத்தித் திறனும் பாதிக்கப்படுகிறது. அதனால்தான், ஏழை, எளிய பெண்களுக்கு சமையல் எரிவாயுவை அளிக்கும் வகையில் “பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தை” மத்திய அரசு கொண்டுவந்தது. அத்திட்டத்தின் கீழ் 5 கோடிப் பேருக்கு சமையல் எரிவாயு கிடைக்க வகை செய்யப்பட்டது.

இந்த ஒரே ஒரு செயல் ஏழைகளின் உடல்நலம் காத்து, உற்பத்தித் திறனை அதிகரித்து, தீங்கு தரும் மாசினைக் குறைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு எரிவாயு சப்ளைக்கான இணைப்பை அளிக்கிறது. நுகர்வோர் எரிவாயுவைத் தேவைப்படும்போது வாங்குவர். இதன் மூலம், கடந்த ஏழு மாதங்களில்  ஒரு கோடிக்கும் மேலானோர் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர்.

இது தவிர, குழாய் மூலம் 1 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு தருவது என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 15 ஆயிரம் கி.மீ. நீளத்துக்கு உள்ள தேசிய எரிவாயு இணைப்பை 30 ஆயிரம் கி.மீ. நீளத்துக்கு விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. எரிவாயு குழாயை அமைத்து வருகிறோம். மிகவும் வளர்ச்சி குறைந்த கிழக்கு பிராந்தியத்தில் புதிதாக எரிவாயு குழாயை அமைத்து வருகிறோம். இதன் மூலம் லட்சக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 2018ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் முழுமையாக மின்சார வசதியை அளிப்பதை உறுதி செய்வதற்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

எரிசக்தி திறனை இப்போது கூறுகிறேன்.

இந்தியாவில் வர்த்தகப் போக்குவரத்து லாரிகள் மூலம் மேற்கொள்வது அதிகரித்து வருகிறது. எரிசக்தியைத் திறனுடன் பயன்படுத்துவதை அதிகரிப்பதற்காக, ரயில்வே சரக்குப் போக்குவரத்துக்கு எனது தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதற்காக 2014-15ஆம் ஆண்டிலிருந்து 2016-17ஆம் ஆண்டு வரையில் ரயில்வே துறையில் அரசு மூலதன முதலீட்டை நூறு சதவீதம் அதிகரிக்கிறோம். சரக்குப் போக்குவரத்துக்கு என தனி தாழ்வாரத்தை உருவாக்கிவிட்டோம். மும்பைக்கும் அகமதாபாதுக்கும் இடையில் அதிவேக ரயில் போக்குவரத்து சேவையை அமைத்து வருகிறோம். இந்த ரயில்போக்குவரத்து விமானப் போக்குவரத்தை விட எரிசக்தித் திறன் கொண்டதாக இருக்கும். உள்நாட்டிலும் கடலோரத்திலும் நீர்வழிப் பாதையை அமைப்பதற்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

எங்களது சாகர்மாலா திட்டம் நாட்டின் நீளமான கடலோரப் பகுதியை இணைக்கும். பெரிய நதிகளின் வழியாக உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்தை அமைப்பதற்கும் தயாராக இருக்கிறோம். இந்நடவடிக்கைகள் எரிசக்தித் திறனை மேம்படுத்தும். நாம் நீண்டகாலம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்ட மசோதா நிறைவேறிவிட்டது. மாநில எல்லைகளுக்குள் இருக்கும் இருக்கும் சில இடையூறுகளை அகற்றுவதன் மூலம் போக்குவரத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை மாற்றி, எரிசக்தித் திறனை மேலும் மேம்படுத்துகிறோம்.

வளரும் நாடுகளின் எண்ணெய் வளத் துறை அமைச்சர்கள் எல்லோருக்கும் எரிசக்திக்காகச் செலவிடுவது தெரியும். இருந்தபோதும், பெட்ரோல், டீசல் விலைகளைக் கட்டுப்படுத்தவில்லை. சமையல் எரிவாயுவின் விலையையும் சந்தையே நிர்ணயிக்க விட்டுவிட்டோம். நடுத்தர, பாதிப்புக்கு ஆளாகும் சமூகத்தினருக்கான மானியத்தை அவர்களது வங்கிக் கணக்குகளில் சேர்த்து விடுகிறோம். இது எரிவாயு மானியச் சலுகையைத் தவறாகப் பயன்படுத்துவதை நீக்கிவிட்டது.இதன் மூலம் பெரிய தொகை சேமிக்கப்பட்டுவருகிறது. எரிசக்தியைத் திறன் அதிகரிப்பதற்கு இத்தகைய நடவடிக்கைகளும் உதவின.

நீடித்த எரிசக்தியை, என்னைப் பொருத்தவரை புனிதமான கடமையாகக் கருதுகிறேன். இதை இந்தியா கட்டளையாக அல்ல, கடமையாகச் செய்கிறது. 2005ம் ஆண்டிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு கரியைத் தீவிரமாகப் பயன்படுத்துவதை, 33 சதவீதம் குறைத்திருக்கிறோம். அதில் இந்தியா முதன்மையான நாடாக இருக்கிறது. தனிநபர் எரிசக்திப் பயன்பாட்டில் நாம் தொடக்கத்திலேயே இருந்தபோதும், இதை நிறைவேற்றுகிறோம். பூமியிலிருந்து கிடைக்கும் எரிபொருள் அல்லாத எரிசக்தி உற்பத்தியில் 40 சதவீதத்தை 2030ம் ஆண்டுக்குள் எட்டுவது என்று குறிக்கோளாக இருக்கிறோம். புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம் 2022ம் ஆண்டில் மிகப் பெரிய அளவில் 175 கிகா பைட் உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இத்துறையில் எங்களது முயற்சிகள், ஆற்றல் அதிகரித்துள்ளன. விலையோ சரிந்து வருகிறது. அதுமட்டுமின்றி, குறைந்த மின்சாரத்தில் எரியும் எல்.இ.டி. விளக்குகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்துவருகிறோம்.

போக்குவரத்துக்கு சி.என்.ஜி., எல்.பி.ஜி. எனப்படும் எரிவாயுக்கள், உயிரி எரிபொருட்கள் சுத்தமான எரிபொருட்களாகும். மேலும், தரிசு நிலங்களில் உயிரி எரிபொருள் உற்பத்திக்கான வழிவகைகளைக் கண்டறிந்து வருகிறோம். இதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும்.  எரிசக்தி சவால்களை எதிர்கொள்ள அடுத்த தலைமுறைக்கான உயிரி எரிபொருள்கள் குறித்த ஆய்வு- அபிவிருத்தி துறைகள் அடிக்கடிக் கூட்டம் நடத்தவேண்டும்.

எரிசக்தி பாதுகாப்பைப் பொறுத்தவரையில், உள்நாட்டு எண்ணெய், எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக்  குறைத்துக் கொள்ளவேண்டும். 2022ம் ஆண்டில் எண்ணெய், எரிவாயு இறக்குமதியில் 20 சதவீதம் குறைத்துக் கொள்ள குறிக்கோள் வைத்திருக்கிறோம். எண்ணெயைப் பயன்படுத்துவது அதிகரிக்கும் காலத்தில் இதை நிறைவேற்றியாக வேண்டும்.

உள்நாட்டிலேயே ஹைட்ரோகார்பன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு வசதியாக வலுவான, முதலீட்டுக்கு உகந்த கொள்கையைக் கொண்டிருக்கிறோம். பத்தாண்டுகளுக்கு முன் புதிதாகத் துரப்பணப் பணிக்கு உரிமம்  அளிக்கும் திட்டத்தை இருபது ஆண்டுகளுக்கு முன் இந்தியா கொண்டுவந்தது. இதன் மூலம், நூறு சதவீத நேரடி முதலீட்டுக்கு வகை செய்யப்பட்டது.  எனினும், இந்தியாவின் உள்நாட்டு எண்ணெய் வளம், எரிவாயு துரப்பணத்தை பல்வேறு விஷயங்கள் மோசமாகப் பாதித்துவிட்டன.

முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு, ஹைட்ரோகார்பன் எடுக்கவும் உற்பத்தி செய்யவும் புதிய கொள்கையை உருவாக்கியுள்ளோம்.  இதன் மூலம் கிடைக்கும் பலன்கள்:

நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் மீதேன், எரிவாயு உள்பட எல்லா வகை ஹைட்ரோகார்பன்களையும் எடுப்பதற்கும் உற்பத்தி செய்யவதற்கும் சீரான உரிமம் வழங்கும் முறையைச் சீராக்குவது,

இயற்கையான எரிபொருளைத் தோண்டியெடுக்க உரிமை பெற்றவர்கள், தங்களுக்குத் தேவையான இடத்தைத் தாங்களே தேர்ந்தெடுக்க அனுமதிப்பதற்கான கொள்கை.

லாபத்தைப் பங்கிடுவதற்குப் பதில், வருவாயைப் பகிர்ந்துகொள்ள முறையை அறிமுகம் செய்வது.

கச்சா எண்ணெய், நிலவாயுவை உற்பத்தி செய்வோர் விலையையும் சந்தையையும் நிர்ணயித்துக் கொள்ள வகை செய்தல்.

கவனிக்கப்படாத நிலப் பகுதி தொடர்பான கொள்கையைக் கடந்த ஆண்டு நாங்கள் அறிவித்தோம். அதன்படி, 67 நிறுவனங்கள் அவற்றைக் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்த அந்தக் கொள்கை வகை செய்கிறது. அவை அந்த நிலப் பகுதிகளில் மொத்தம் 8.9 கோடி மெட்ரிக் டன் அளவுக்கு எண்ணெய், அதற்கு இணையான நிலவாயு கண்டறியலாம்.  இது தொடர்பாக நிலங்களை ஏலத்தில் எடுப்பதில் பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக அறிகிறேன்.  தற்போது, இதற்கான சந்தைச் சூழலுக்கு ஏற்ற நிலையும் இருக்கிறது. இதையடுத்து, போட்டி ஏற்படுவதால், நமது சந்தை நிறுவனங்களின் தரமும் செயல்பாட்டுத் திறனும் அதிகரிக்கும்.

நமது சாதகமான வெளியுறவுக் கொள்கையும் எரிசக்தி உத்தியும் அண்டை நாடுகளுடனும் கொண்டுள்ள உறவை வலுப்படுத்துகின்றன. எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நமது எண்ணெய் – எரிவாயு நிறுவனங்கள் தங்களது வெளிநாட்டு சகநிறுவனங்களுடன் இணைந்து அதிகமான எண்ணெயை எடுக்கும் பணியில் ஈடுபடும் என எதிர்பார்க்கிறேன். ரஷியாவில் 1.50 கோடி மெட்ரிக் டன் எண்ணெய்க்காக 560 கோடி டாலர் முதலீட்டில் ஹைட்ரோ கார்பன்களை எடுத்துள்ளது ஓர் உதாரணம் ஆகும்.

இந்திய எரிசக்தி நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக மாற வேண்டும். இந்திய – மத்திய கிழக்கு நாடுகள், இந்திய மத்திய – ஆசிய நாடுகள், இந்திய – தெற்காசிய நாடுகள் இணைந்து எரிசக்தி இணையமாக உருவாக வேண்டும்.

இயற்கை எரிவாயு அடுத்த தலைமுறைக்கான விலை மலிந்த, சூழல் பாதிப்பு குறைந்த இயற்கை எரிபொருளாகும். எரிவாயு சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நடைபோடுவதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம். இறக்குமதிக்கான வழி வகை காணும் சமயத்தில், உள்நாட்டின் எரிசக்தித் தேவைக்கை ஈடு செய்யும் வகையில், இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் புதுப்பிக்கத் தக்க மாற்று எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதில் இயற்கை எரிவாயுவும் முக்கியப் பங்கினை வகிக்கிறது. மின்சாரத்திற்கு எரிவாயு சார்ந்த எரிசக்தி மிக முக்கியத் தேவையாக உள்ளது.

நண்பர்களே,

இந்தத் தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்ற, திட்டத்தை வடிவமைப்பதிலும், வளங்களைக் கையாள்வதிலும் நாம் மிகத் திறமையானவர்களாக இருந்தாக வேண்டும். இந்தியா போட்டித் தன்மை மிகுந்த வலுவான நாடாகத் திகழ இது முக்கியமானதாக அமைகிறது.

இது, எரிபொருளைச் சுத்திகரிப்பது, பதனிடுவது ஆகியவற்றை மட்டுமின்றி, இது குறித்த திட்டத்தை உரிய நேரத்திலும் திறமையாகவும் நிறைவு செய்யப் பெரிதும் உதவும்.

அறிவார்ந்த திறமைகயிலும், செயலூக்கத்திலும் இதர நாடுகளுக்கு இந்தியா கிரியா ஊக்கியைப் போல் எப்போதும் அமைந்துள்ளது. “இந்தியாவில் உற்பத்தி செய்”, “முன்னேற்ற இந்தியா”, “எழுச்சி மிக்க இந்தியா” (Make in India, Startup India and Standup India) என்ற முழக்கங்கள் இளைஞர்கள் இந்திய எண்ணெய் மற்றும் நிலவாயுத் துறைகளில் இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக ஈடுபடவும், புதிய சிந்தனைகளைச் செயல்படுத்தவும் வாய்ப்பாக அமையும்.

எண்ணெய் சுத்திகரிப்பு, நேனோடெக்னாலஜி, கிரியா ஊக்கி மேம்பாடு, உயிரி எரிபொருள், மாற்று எரிசக்தி ஆகிய துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் “இந்த்மேக்ஸ்” என்ற தொழில்நுட்ப மேம்பாடு வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கும் வணிகப் பயன்பாட்டு நிலையை அடைந்ததற்கும் வந்துள்ளது இந்தப் புதிய சிந்தனையால் கிடைக்கும் பலனுக்குச் சரியான உதாரணமாகும்.

ஹைட்ரோகார்பன் உற்பத்தியில் ஈடுபடும் உலக நிறுவனங்களுக்கு எனது செய்தி :  இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என்று அழைக்கிறோம். இங்கு தொழில் வணிகத்தை எளிதாக மேற்கொள்ள நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் முயற்சிகள் இந்தியாவை உயர்த்தியிருக்கிறது. எங்களது கடப்பாடு உறுதியானது என்றும் முடங்கிக் கிடந்ததை முடுக்கிவிடுவதே நமது குறிக்கோள் என்றும் உறுதி கூறுகிறோம்.

நண்பர்களே,

ஒருபுறம் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, கட்டுப்படியாகக் கூடிய, நம்பகமான எரிசக்தி வளங்கள் தேவை. இதற்கு ஹைட்ரோகார்பன் பொருட்கள் மிக முக்கியமானதாக அமையும். அதே சமயம் சுற்றுச்சூழல் மாசுபடக் கூடாதே என்ற கவலையுடனும் நாம் இருந்தாக வேண்டும். இந்நிலையில், எதிர்காலத்தில் அதிக ஆற்றலுடன் நீண்டநாள் பயன்படக் கூடிய வகையில் ஹைட்ரோகார்பன் எரிசக்தி அமையும் வகையில் பல்வேறு புதிய யோசனைகளை இந்தக் கூட்டத்தில் பங்கேற்போர் தெரிவிப்பர் என்று நான் நம்புகிறேன். அரசிடமிருந்து எல்லாவிதமான ஆதரவையும் அளிக்க உறுதி தருகிறேன். அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதற்கும், இந்தியாவில்  எரிசக்தித் துறையில் புதிய மாற்றம் ஏற்படுவதற்கு, தங்களது பங்களிப்பைச் செலுத்துவதற்கும் நான் நன்றி கூறுகிறேன்.