பிரதமர் மோடி இன்று அனைத்து துறைகளின் செயலாளர்களையும் சந்தித்தார். மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்களும் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.
எட்டு செயலாளர்கள் குழுவினர் ஜனவரி மாதத்தில் பிரதமருக்கு வழங்கிய அறிக்கையை சார்ந்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த சுருக்கமான உரையை அமைச்சரவை செயலாளர் வழங்கினார்.
எட்டு குழுக்களில் இரண்டு குழுக்களின் பிரதிநிதிகள் தங்கள் பரிந்துரைகளை செயல்படுத்துவது எவ்வளவு தூரம் நிறைவடைந்துள்ளது என்பது குறித்த காட்சியளிப்பை வழங்கினார்கள்.
செயலாளர்கள் அடங்கிய பத்து குழுக்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் நிர்வாகம் குறித்த தங்கள் அறிக்கையை நவம்பர் இறுதியில் வழங்குவார்கள். ஒரு மையநோக்கு சார்ந்து செயல்படும் விதத்தில் ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த குழுக்களோடு ஒப்பிடுகையில், இந்த குழுக்கள் விவசாயம், ஆற்றல், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் சார்ந்து இயங்குவார்கள்.
செயலாளர்களிடம் பேசிய பிரதமர், எட்டு குழுக்களாக அவர்கள் செய்த பணிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மத்திய அரசு செய்துள்ள பணிகளை விமர்சன பார்வையில் ஆய்வு செய்யுமாறு அவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். மேலும் ஆய்வு சார்ந்த பணிகளில் இளம் அதிகாரிகளை ஈடுபடுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
மக்கள் தொகையியல் வேறுபாடுகள் குறித்து பேசிய பிரதமர், அனைத்து குழுக்களும் தங்கள் பரிந்துரைகளில் 80கோடி இளைஞர்களை பயன்படுத்துவது குறித்து குறிப்பிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இந்திய அரசின் செயலாளர்களின் கூட்டறிவும், கொள்கைகளை உருவாக்கவல்ல அனுபவமும், இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் உள்ளதாக தெரிவித்தார். காத்திருக்கும் பணியில் தங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.