சீனாவின் தேசிய தினத்தையொட்டி சீன மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது உறவுகள் நூற்றாண்டுகள் பழமையானதாக, ஆன்மிகம், கற்றல், கலை, வர்த்தகம் மற்றும் பரஸ்பர நாகரீகத்தின் மீதான மரியாதை மற்றும் வளமையை பங்கிடுதல் ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது. நான் முன்பே கூறியதைப் போல, நமது இரு நாடுகளும், பல வழிகளில், ஒரே மாதிரியான பேரார்வங்கள், சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பிரதிபலிக்கக் கூடியவை. பரஸ்பரம் வெற்றில் உற்சாகம் பெறக் கூடிய நாடுகள். உலகமே ஆசியாவை திரும்பிப் பார்க்கும் வேளையில், இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சி மற்றும் வளமை ஆகியனவும், நமது நெருக்கமான ஒத்துழைப்பும், அமைதியான மற்றும் நிலைப்புத்தன்மையான ஆசியாவை உருவாக்கும் வல்லமை கொண்டவையாக உள்ளன. அதிபர் க்ஸி மற்றும் பிரதமர் லீ ஆகியோருடன் நான் பகிர்ந்து கொண்ட ஒரு லட்சியம் இது.
சமீப காலங்களில், நமது அனைத்து உறவுகளிலும் பங்கேற்பை ஆழப்படுத்திக் கொண்டுள்ளோம். பரஸ்பரம் நம்பகத்தன்மை மற்றும் நம்பிக்கையை தீவிரமாக்கவும் மக்களுக்கு இடையில் உறவுகள் விரிவடையவும் வலியுறுத்தியுள்ளோம். மேலும் இந்த திசையை நோக்கி நம்முடைய பெருமுயற்சிகளைத் தொடர்வோம்.