PMO officials take initiative to train staff for mobile banking and cashless transactions
PMO officials demonstrate process of cashless transactions, help staff download the relevant mobile apps on mobile phones

ரொக்கமற்ற பரிவர்த்தனை செய்வதை அதிகரிக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கோரிக்கைக்கு ஏற்ப, பிரதமர் அலுவலகத்தின் உயர் அலுவலர்கள் இன்று புதிய முயற்சி ஒன்றை எடுத்து உள்ளனர்.

பிரதமரின் தலைமைச் செயலர் திரு. நிருபேந்திர மிஸ்ரா, பிரதமரின் கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் பி.கே மிஸ்ரா ஆகியோரை கொண்ட அலுவலர்கள் குழு, 7, லோக் கல்யாண் சாலையில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் ‘செல்பேசி வங்கி சேவை மற்றும் அன்றாட ரொக்கமற்ற பரிமாற்றத்தில் பயன்படுத்தப்படும் யூ.பி.ஐ., இ-வாலேட்ஸ் போன்ற செல்பேசி செயலிகளை உபயோகப்படுத்துவதற்கான பயிற்சியை’ பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு வழங்கினர்.

ஊழியர்களுக்கு, ரொக்கமற்ற பரிவர்த்தனை குறித்த விளக்ககாட்சியை வழங்கிய அலுவலர்கள், இது தொடர்பான செல்பேசி செயலிகளை பதிவிறக்கம் செய்யவும் உதவினர்.

இந்த பயிலரங்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி, நவீன வங்கி சேவைகள் மற்றும் பரிவர்த்தனை முறைகளை அறிந்துக் கொள்ள பங்குப்பெற்றவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் மைகவ்- ஐ சார்ந்த அலுவலர்கள் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டனர்.