Prime Minister condoles demise of former Minister and MP, Shri E Ahamed

முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. இ. அகமது மறைவுக்கு பிரதமர்  திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

``மிகுந்த அக்கறையுடன் நாட்டுக்கு சேவை செய்த முதுபெரும் அரசியல் தலைவர் திரு. இ. அகமது மறைவு குறித்து அறிந்து வருத்தமடைந்தேன். என் ஆழ்ந்த இரங்கல்கள். கேரளாவின் முன்னேற்றத்துக்கு திரு. இ. அகமது குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளார். மேற்காசிய நாடுகளுடன் இந்தியாவின் உறவுகளை பலப்படுத்துவதில் அவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதற்காக திரு இ. அகமது மேற்கொண்ட தொடர் முயற்சிகள் நினைவில் கொள்ளப்படும்'' என்று பிரதமர் கூறியுள்ளார்.