குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு மக்களவையில் பதில் அளித்துப் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் வீட்டுவசதி மற்றும் ரயில்வே துறைகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 10,83,000 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 22,27,000 என்றும் அவர் குறிப்பிட்டார்.  ரயில்வே துறையில் அகலப்பாதை அமைத்தல் பணிகளை விளக்கிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு அது இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.