மேடையில் இருக்கும் நண்பர்களே,
மதிப்புக்கு உரியவர்களே,
உங்கள் அனைவரையும், பேரிடர்களின் போது இடர்களை குறைப்பதற்காக செண்டாய் வரைவுச் சட்டம் ஏற்றுக்கொண்டதன்பின் முதல்முறையாக தில்லியில் நடைபெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டிற்கு வரவேற்கிறேன்.
தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்புகள், ஆசிய-பசிபிக் பகுதிகளில் இருக்கும் அரசுகள், ஐக்கிய நாடுகள், மற்றும் பிற கூட்டாளிகள் அனைவரும் இங்கு முக்கியமான நோக்கம் கருதி ஒன்றுபட்டிருப்பதை வரவேற்கிறேன்.
நண்பர்களே,
2015 மிகவும் முக்கியமான ஆண்டு! செண்டாய் வரைவுச் சட்டம் மட்டுமல்லாமல், சர்வதேச சமூகம் மனித இனத்தின் வருங்காலத்தை செழுமைப்படுத்தும் பொருட்டு மேலும் இரண்டு வரைவுச் சட்டங்களை ஏற்றுக்கொண்டது:
-தக்கவைக்கக்கூடிய மேம்பாட்டு கொள்கைகள்,
– பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தம்.
இந்த மூன்று வரைவுச் சட்டங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இவைகளின் வெற்றி ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவை. பேரிடர் மேலாண்மை பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ளவும், தக்கவைக்ககூடிய மேம்பாட்டு கொள்கைகளை அடையவும் துணையாக இருக்கிறது. அதனால்தான் இந்த மாநாடு முக்கியமானதாக கருதப்படுகிறது.
நண்பர்களே,
கடந்த இருபது ஆண்டுகளாக உலகமும், குறிப்பாக நம் பகுதியும் ஏராளமான மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது. அதில் பெரும்பான்மையானவை நல்ல விஷயங்களே. நம் பகுதியின் ஏராளமான நாடுகள் அவற்றின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு துணையாக இருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் ஏழ்மையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆசிய-பசிபிக் பகுதி பல்வேறு வழிகளில் சர்வதேச முன்னோடியாக திகழ்கிறது.
ஆனால் இந்த முன்னேற்றத்தை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. சவால்களும் நிறையவே உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் பேரழிவுகளால் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கையில் உலகின் முதல் பத்து நாடுகளில் ஏழு நாடுகள் ஆசிய பசிபிக் பகுதியில் உள்ளன.
பேரழிவுகளால் ஏற்படும் உயிரிழப்பை நான் நேரடியாக குஜராத் பூகம்பத்தின் போது 2001ஆம் ஆண்டு கண்டிருக்கிறேன். மாநில முதல்வராக என் மக்களோடு இணைந்து பணியாற்றி அவர்களின் மறுவாழ்க்கைக்கு பாடுபட்டிருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. அதே நேரம் பேரழிவு ஏற்படுத்திய சேதத்தில் இருந்து மீளவேண்டும் என்பதற்கு அவர்கள் காட்டிய துணிச்சல், உறுதி, போன்றவையும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. என் அனுபவத்தில், நாம் எந்த அளவுக்கு மக்களின் தலைமைப் பண்பை நம்புகிறோமோ அந்த அளவுக்கு பலன்கள் சிறப்பாக இருக்கும். தனிப்பட்ட நபர்களின் வீடுகளின் மறுசீரமைப்புக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் வீடுகளின் மறுசீரமைப்புக்குமே இது பொருந்தும். பூகம்பத்தால் பாதிக்கப்படாத பள்ளியை மக்கள் சமூகமே கட்டிக்கொண்டபோது அந்த வேலை விரைவாக முடிந்ததோடு, அரசுக்கும் ஏராளமான பணம் மிச்சமானது. இதுபோன்ற தன்னார்வ செயல்களையும், தலைமைப்பண்பையும் சரியான கொள்கைகள், நடைமுறைகள் மூலம் நாம் ஆதரிக்கவேண்டும்.
நண்பர்களே,
ஆசியா பேரழிவுகளைப் பற்றி பாடம் படித்துள்ளது. கால் நூற்றாண்டு காலத்திற்கு முன்பு ஆசியாவில் வெகு சில நாடுகளில் மட்டுமே தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனங்கள் இருந்தன. இன்று முப்பதுக்கும் மேற்பட்ட ஆசிய நாடுகளில் இந்த அமைப்புகள் உள்ளன. 2004-ல் இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு பாதிக்கப்பட்ட ஐந்து நாடுகளும் பேரிடர் மேலாண்மை சார்ந்த புதிய சட்டங்களை கொண்டுவந்தார்கள். இன்னும் சில தினங்களில் முதல் சர்வதேச சுனாமி நினைவு தினத்தை கடைபிடிக்கப் போகிறோம். சுனாமி முன்னெச்சரிக்கையில் நாம் அடைந்துள்ள மேம்பாடுகளை கொண்டாடும் தினமாகவும் இது அமையும். 2004ல் ஏற்பட்ட சுனாமியின்போது நாம் முன்னெச்சரிக்கையாக இல்லை. இப்போது இந்திய பெருங்கடலில் நன்றாக செயல்படும் சுனாமி எச்சரிக்கை முறைகள் உள்ளன. ஆஸ்திரேலிய மற்றும் இந்தோனேஷிய கூட்டாளிகளுடன், தேசிய பெருங்கடல்சார் தகவல் சேவை கழகம் அந்தந்த பகுதிகள் சார்ந்த சுனாமி தகவல்களை வெளியிடும்படு பணிக்கப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கையிலும் இதே போன்ற மேம்பாடுகள் உள்ளன. 1999 முதல் 2013 வரை நடந்த புயல் பேரிடர்களை ஒப்பிட்டுப்பார்த்தால் நாம் எந்த அளவுக்கு இப்போது மேம்பட்டுள்ளோம் என்பது தெரியும். பல்வேறு நாடுகளிலும் இத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1991 புயலுக்கு பின் வங்கதேச அரசு பல்வேறு சமூகங்கள் இணைந்த புயல் எதிர்கொள்ளுதல் நிகழ்ச்சியை நடத்தியது. புயலால் ஏற்படும் உயிரிழப்பை பெருமளவில் அது தடுத்தது. சர்வதேச அளவில் இந்த நடைமுறை இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
நண்பர்களே,
இது வெறும் ஆரம்பம்தான். பெரிய பெரிய சவால்கள் இன்னும் உள்ளன. ஆசிய பசிபிக் பகுதி வேகமாக நகரமயமாக ஆகி வருகிறது. பத்து ஆண்டுகளுக்குள் கிராமங்களைவிட நகரத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பேரிடர் மேலாண்மையை செயல்படுத்துவதில் இது பெரும் சவாலாக இருக்கும். ஏனெனில் குறைந்த இடத்தில் நிறைய மக்கள் வாழ்வதோடு, பேரிடர் ஆபத்து அதிகமுள்ள இடத்தில் பொருளாதார மையங்களும், சொத்துக்களும் இருக்கும். இந்த வளர்ச்சியை திட்டம் மற்றும் செயலாற்றுதலின் மூலம் நாம் கட்டுப்படுத்தவில்லை எனில், உயிரிழப்புகள் அதிக அளவில் இருப்பதை தடுக்க முடியாது.
இதை மனதில் வைத்து பத்து அம்ச கொள்கை ஒன்றை நமது பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் வண்ணம் குறிப்பிடுகிறேன்:
முதலில், அனைத்து முன்னேறிய பகுதிகளிலும் பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும். இதன்மூலம் விமான நிலையங்கள், சாலைகள், சுரங்கப்பாதைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், பாலங்கள் என அனைத்தும் தரமானதாகவும், அந்தந்த சமூகத்துக்கு சரியான சேவையை அளிக்கும் வண்ணமும் இருக்கும். இன்னும் சில பத்தாண்டுகளில், புதிய உட்கட்டமைப்புகள் அனைத்தும் நம் பகுதியில் வரத்துவங்கிவிடும். பேரிடர் பாதுகாப்புக்கு ஏற்ப இவைகள் கட்டப்படுவதை நாம் உறுதிசெய்தாக வேண்டும். இது தொலைநோக்கில் பலனளிக்கக்கூடிய திட்டமாகும்.
பொதுச் செலவுகள் அனைத்தும் இடர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தியாவில், ‘அனைவருக்கும் வீடு’, ‘ஸ்மார்ட் சிட்டி’ போன்ற திட்டங்கள் பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்தப்பகுதிகளில் பேரிடர் பாதிக்காத உட்கட்டமைப்புகளை அமைக்க இந்தியா சர்வதேச அமைப்புகள், மற்றும் நாடுகளுடன் இணைந்து வேலை செய்யும். பேரழிவு சமயங்கள் குறித்த புதிய விஷயங்களை அறியவும், தொழில்நுட்பங்கள் மூலம் சமாளிக்கவும் இது உதவும்.
இரண்டாவதாக, அனைவருக்கும் இடர் காப்பீடு என்பதை நோக்கி நாம் வேலை செய்யவேண்டும். ஏழைகளின் வீடுகளில் இருந்து, நடுத்தரவர்க்க அமைப்புகளில் இருந்து பன்னாட்டு அமைப்புகள் வரை. இந்தப் பகுதியின் பல நாடுகளில் காப்பீடு என்பது நடுத்தர வர்க்கம் முதல் மேல்நடுத்தர வர்க்கம் வரை மட்டுமே இருக்கிறது. பெரிதாகவும், அதே சமயம் புதிதாகவும் நாம் சிந்தித்து இதை மாற்ற வேண்டும். மாநிலங்கள் காப்பீடுகளை முறைபடுத்துவதோடு நில்லாமல், யாருக்கு தேவையோ அவர்கள் அதை பெறுவதை உறுதி செய்யவேண்டும். ஏழைகளையும் பொருளாதாரத்தில் சேர்ப்பதிலும், காப்பீட்டை அவர்களுக்கும் வழங்குவதிலும் இந்தியா துணிச்சலான காரியங்களை செய்துள்ளது. ஜன்தன் யோஜனா பல லட்சம் பேரை வங்கிகளுக்கு கொண்டு வந்துள்ளது. சுரக்ஷா பீமா யோஜனா இடர் காப்பீடு வழங்குகின்றது. ஃபசல் பீமா யோஜனா லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இடர் காப்பீடு வழங்கியுள்ளது.
மூன்றாவதாக, பேரிடர் மீட்பில் பெண்களை பெரிய அளவில் ஈடுபடுத்தவேண்டும், பெண்கள் தான் பேரிடர் சமயங்களில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கென்று தனித்திறனும், பலமும் உண்டு. ஏராளமான பெண் தன்னார்வலர்களுக்கு நாம் பயிற்சிதர வேண்டும். அதன்மூலம் பேரிடர் சமயங்களில் பெண்களின் சிறப்பு தேவைகளை இவர்களால் புரிந்துகொள்ள முடியும். பெண் பொறியாளர்கள், கொத்தனார்கள், கட்டிட தொழிலாளிகள் மறு அமைப்பின் போது உதவியாக இருப்பார்கள்.
நான்காவதாக, இடர்களை இனங்காண்பதில் முதலீடு செய்யவேண்டும். பூகம்பங்களை மேப் செய்வதற்கு நாம் பரவலாக பல நடைமுறைகளையும், கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டுள்ளோம். இதை சார்ந்து இந்தியாவில் பூகம்ப ஆபத்துள்ள பகுதிகளை, ஐந்து அதிகமான ஆபத்துள்ள பகுதிகள் என்றும், இரண்டு குறைவான ஆபத்துள்ள பகுதிகள் என்றும் குறித்துள்ளோம் பிற பேரழிவுகளான ரசாயன அழிவு, காட்டுத்தீ, புயல், வெள்ளம் ஆகியவற்றுக்கும் நாம் இனம் காண வேண்டும். இதன்மூலம் இயற்கை குறித்த புரிதலும், பேரிடர் குறித்த புரிதலும் உலகளாவிய அளவில் இருக்கும்.
ஐந்தாவதாக, பேரிடம் மேலாண்மைக்கு உதவும் நமது தொழில்நுட்பத்தை ஊக்கப்படுத்த வேண்டும். அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோரை ஒன்றாக கொண்டு வரும் இணைய மையம் ஒன்று அமைக்கப்படவேண்டும். இதன்மூலம் அனுபவம், தொழில்நுட்பம், வளங்கள் ஆகியவற்றை அவர்களால் பகிர்ந்துகொள்ள முடியும்.
ஆறாவதாக, பல்கலைகழகங்களை பேரிடர் சமயங்களில் கூட்டாக வேலை செய்யும் வகையில் இணைக்க வேண்டும். பல்கலைக்கழகங்களும் சமூக பொறுப்பு நிச்சயம் உண்டு. செண்டாய் வரைவுச் சட்டம் முதல் ஐந்தாண்டுகளில் பல்கலைக்கழகங்கள் இணைந்த ஒரு சர்வதேச வலையத்தை உருவாக்க வேண்டும். இந்த வலையம் வாயிலாக, பேரிடர் மேலாண்மை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். கடல்புறமாக அமைந்துள்ள பல்கலைகழகங்கள் கடல்சார் பேரிடர் குறித்தும், மலைகளில் அமைந்துள்ள பல்கலைகழகங்கள் மலைகளில் பேரிடர் குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ளலாம்.
ஏழாவதாக, சமூகதளங்கள், செல்ஃபோன்கள் வழங்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பேரிடர் சமயங்களில் தகவல் பரிமாற்றத்தை சமூகதளங்கள் அதிகப்படுத்தியுள்ளன. அமைப்புகள் தங்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு விரைவாக உதவி செய்ய இவை பெரிதும் உதவுகின்றது. ஒவ்வொரு பேரிடரிலும் மக்கள் சமூக தளங்களை வைத்து ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வது அதிகரித்துள்ளது. ஆக, பேரிடர் சமயங்களில் சமூக வலைதளங்களில் தேவையை நாம் உணர்ந்து அதற்கேற்ற செயலிகளை உருவாக்க வேண்டும்.
எட்டாவதாக, உள்ளூர் சேவை மையங்களையும், முன்னெடுப்புகளையும் அதிகப்படுத்த வேண்டும். வேகமாக வளரும் பொருளாதார பகுதிகளில் பேரிடர் சமாளிப்பு என்பது பெரிய அளவில் தேவைப்படும் ஒன்று. அரசு அமைப்பு இந்த பகுதிகளில் பேரிடர் மேலாண்மைக்கு உதவும் வகையில் செயல்படலாம். குறிப்பிட்ட செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளால சமூகம் சார்ந்த முயற்சிகள் பெரிய அளவில் இருக்கின்றன. இதன்மூலம் உடனடியாக மீட்புப்பணிகளை தொடங்க முடிகிறது. இந்த சமூகம் சார்ந்த சேவைகளை நாம் விரிவுபடுத்த வேண்டும். இதன்மூலம் இடர் குறைவதோடு, உள்ளூர் உட்கட்டமைப்பை மேம்படுத்த வாய்ப்புகளும் கிடைக்கிறது.
ரெஸ்பான்ஸ் அமைப்புகள் இந்த சமூகத்தினருடன் தொடர்பில் இருந்து, பேரிடர் சமயங்களில் செய்யவேண்டிய விஷயங்களுக்கு பழக்க வேண்டும். உள்ளூர் தீயணைப்பு சேவை வாரம் ஒரு பள்ளிக்கு சென்றால் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தீயணைப்பு நடவடிக்கைகளை கற்றுக்கொடுக்க முடியும்.
ஒன்பதாகவதாக, பேரிடர் மூலம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்துவது அவசியம். ஒவ்வொரு பேரிடருக்கு பின்னாலும் கற்றுக்கொள்ள ஏராளமான பாடங்கள் உள்ளன. ஆனால் அதை பெரும்பாலும் நாம் கற்பதில்லை. பெரும்பாலும் செய்த தவறுகளையே செய்கிறோம். கற்பதை சுலபமாக்கும் காட்சி சார்ந்த சிஸ்டம் தேவை. ஐநா பேரிடரின் ஆபத்துகள், அழிவுகள், மீட்பு, மறுசீரமைப்பு ஆகியவற்றை விளக்கும் ஆவணப்படங்கள் சார்ந்த போட்டிகளை அறிவிக்கலாம்.
பேரிடருக்கு பிந்தைய மீட்சி என்பது மீண்டும் கட்டமைத்துக்கொள்வது மட்டுமல்ல, மேம்பட்ட வகையில் கட்டமைத்துக்கொள்வதும் ஆகும். இதற்கு இடர் கணக்கிடும் முறைகளை தெளிவாகச் சொல்லும் சிஸ்டம்களை அமைத்தல் அவசியம். கூட்டு நாடுகளோடு இணைந்து இந்தியா இந்த பணியில் ஈடுபடும்.
இறுதியாக, பேரிடர் சமயங்களில் சர்வதேச எதிர்வினையை அதிகப்படுத்துதல் அவசியம். பேரிடருக்கு பிறகு பலநாடுகளிலும் இருந்து பேரிடர் எதிர்வினையாளர்கள் சம்பவ இடத்தில் குவிகிறார்கள். ஒரே குடையின் கீழ் நாம் பணிபுரிந்தால் இந்த எதிர்வினையை இன்னும் மேம்படுத்த முடியும். ஐ.நா. சபை இதற்கென தனி லட்சினை உருவாக்கி, உதவிகள், மறுசீரமைப்பு செய்பவர்களை அந்த குடையின் கீழ் இணைக்கலாம்.
நண்பர்களே,
ஆயுதமேந்திய படைகள் அந்நிய சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்கின்றன. ஆனால் பேரிடர் பாதுகாப்பில் நாம்தான் சரியாக கல்விகற்றலின் மூதல் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
செண்டாய் வரைவுச் சட்டத்தை மனதார ஏற்று, எல்லோரும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
செண்டாய் வரைவுச் சட்டத்தை நிறைவேற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் செண்டாய் வரைவுச் சட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வெளியிடப்பட்டது.
பேரிடர் மீட்பு பணிகளில் நாம் அனைத்து நாடுகளோடும் தோளோடு தோள் நிற்கவேண்டும். பகுதிசார்ந்த மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு இந்த விஷயத்தில் பெரும்பங்கு வகிக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், முதல் தெற்காசிய வருடாந்திர பேரிடர் மேலாண்மை பயிற்சியை இந்தியா நடத்தியது. பகுதிசார் ஒத்துழைப்பை மனதில் வைத்து இந்தியா தெற்காசிய செயற்கைகோள் ஒன்றை செலுத்தும். இந்த செயற்கைகோள் பேரிடர் மேலாண்மை சார்ந்த ரிஸ்க் கணக்கிடுதல், தயார்நிலைக்கு துணை இருத்தல், மீட்பு ஆகியவற்றுக்கும், பிற வானிலை தொழில்நுட்பங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இந்த செயற்கைகோளின் உதவி எந்த நாட்டுக்கு தேவைப்பட்டாலும் இந்தியா வழங்கும்.
செண்டாய் வரைவுச் சட்டம் செயல்படுத்தும் இந்த சமயத்தில் பகுதிசார் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வரவேற்கிறோம்.
இந்த மாநாடு நம்மை ஊக்கப்படுத்துவதோடு, கூட்டு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
நன்றி.
2015 was a momentous year! Apart from Sendai Framework, international community adopted 2 major frameworks to shape future of humanity: PM
— PMO India (@PMOIndia) November 3, 2016
They are the Sustainable Development Goals and the Paris Agreement on Climate Change: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 3, 2016
Over the last two decades, the world and especially our region has undergone many changes– most of them positive: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 3, 2016
The Asia-Pacific region has been a global leader in more ways than one: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 3, 2016
We in Asia have learnt from disasters: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 3, 2016
A quarter century ago, only a handful of Asian nations had national disaster management institutions: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 3, 2016
Today, over thirty Asian countries have dedicated institutions leading disaster risk management efforts: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 3, 2016
We now have a fully functional Indian Ocean Tsunami Warning System: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 3, 2016
Same goes for improvements in cyclone early warning. If we compare impact of cyclone events in 1999 & 2013, we can see progress made: PM
— PMO India (@PMOIndia) November 3, 2016
Let me outline a ten-point agenda for renewing our efforts towards disaster risk reduction: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 3, 2016
First, all development sectors must imbibe the principles of disaster risk management: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 3, 2016
Second, work towards risk coverage for all–starting from poor households to SMEs to multi-national corporations to nation states: PM
— PMO India (@PMOIndia) November 3, 2016
Third, encourage greater involvement and leadership of women in disaster risk management: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 3, 2016
Fourth, invest in risk mapping globally. For mapping risks related to hazards like earthquakes we have accepted standards & parameters: PM
— PMO India (@PMOIndia) November 3, 2016
Fifth, leverage technology to enhance the efficiency of our disaster risk management efforts: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 3, 2016
Sixth, develop a network of universities to work on disaster issues: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 3, 2016
Seventh, utilize the opportunities provided by social media and mobile technologies: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 3, 2016
Eighth, build on local capacity and initiative: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 3, 2016
Ninth, opportunity to learn from a disaster must not be wasted. After every disaster there are papers on lessons that are rarely applied: PM
— PMO India (@PMOIndia) November 3, 2016
And tenth, bring about greater cohesion in international response to disasters: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 3, 2016
We have to wholeheartedly embrace the spirit of Sendai which calls for an all-of-society approach to disaster risk management: PM
— PMO India (@PMOIndia) November 3, 2016