2014ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி இந்தியப் பிரதமராக திரு. மோடி அவர்கள் பதவியேற்றார்.  சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் பிறந்த முதல் பிரதமரும் மோடிதான். வேகமும், அர்ப்பணிப்பும், உறுதியும் கொண்ட மோடி, பலகோடி இந்தியர்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பவராக இருக்கிறார்.

மே 2014ல் பதவியேற்றதில் இருந்து இந்திய குடிமக்களில் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி மோடி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்.  ‘அந்த்யோதயா’ எனப்படும் கடைசி குடிமகனுக்கும் எல்லா உரிமையும் கிடைக்கவேண்டும் எனும் கொள்கை மீது மாறா நம்பிக்கை கொண்டவர் மோடி.

புதிய திட்டங்கள் மற்றும் முன்னேடுப்புகளின் மூலம் வேகமான வளர்ச்சியையும், எல்லா குடிமக்களும் அனுபவிக்கத்தக்க வகையில் பயன்களையும், வெளிப்படையான, எளிமையான, அணுகத்தக்க நிர்வாகத்தையும் அரசு சாத்தியப்படுத்தியுள்ளது.

முதன்முறையாக பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் எல்லோரையும் பொருளாதாரத்தில் இணைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது.  அவரது, “மேக் இன் இந்தியா” திட்டம் இந்தியாவில் வணிகத்தை எளிமையாக்கியதன் மூலம் இதுவரை இல்லாத அளவிற்கு முதலீட்டாளர்களையும், தொழிலார்வலர்களையும் பெருக்கியுள்ளது.  தொழிலாளர் சட்ட மாற்றங்கள், தொழிலாளர் உரிமை பாதுகாப்பு ஆகிவரை ‘சத்யமேவஜெயதே’ முன்னெடுப்பின்கீழ் நிறைவேற்றப்பட்டது.   

மக்களுக்கு மூன்று சமூக பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப்படுத்திய ஒரே அரசு இதுதான். அதுமட்டுமல்லாமல் முதியோர் ஓய்வூதியத்திலும், ஏழை மக்கள் காப்பீடுகளிலும் அக்கறை செலுத்தியது.  ஜூலை 2015ல் மக்களின் வாழ்வை மாற்றுவதில் தொழில்நுட்பம் முக்கியப்பங்காற்றும் வகையில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் அறிமுகம் செய்தார்.

அக்டோபர் 2, மகாத்மா காந்தி பிறந்தநாளின்போது தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தினார்.  இந்த திட்டத்திம் பயனும், வீச்சும் வரலாறு காணாதது.

பிரதமரின் வெளிநாட்டுக் கொள்கைகளும், முன்னெடுப்புகளும் உலகின் மிகப்பெரும் ஜனநாயகமான இந்தியாவின் முழு திறனையும் உலகின்முன் வெளிக்கொணர்வதாக இருக்கிறது.  சார்க் நாட்டு தலைவர்களின் முன்னிலையில் பதவி ஏற்றார் பிரதமர் மோடி.  ஐநா சபையின் முன்பு அவர் ஆற்றிய உரை உலகம் முழுதும் பாராட்டுக்களை பெற்றது.  17ஆண்டுகள் கழித்து நேபாளுக்கும், 28ஆண்டுகள் கழித்து நேபாளுக்கும், 31 ஆண்டுகள் கழித்து ஃபிஜிக்கும், 34 ஆண்டுகள் கழித்து சீஷெல்ஸ்க்கும் இருதரப்பு பயணமாகச் சென்ற முதல் பிரதமர் நரேந்திரமோடி தான்.  மோடி பதவியேற்றபின் ஐ.நா, பிரிக்ஸ், சார்க், ஜி20 மாநாடுகள் என எல்லா இடத்திலும் உலக அரசியல் நடப்புகள் மற்றும் பொருளாதாரத்தின் மீதான இந்தியாவின் தலையீடும், பார்வையும் பாராட்டப்பட்டது.   அவரது ஜப்பான் பயணம் இந்திய-ஜப்பான் உறவில் புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்தது.  மங்கோலியா சென்ற முதல் பிரதமரும் மோடிதான். அதுமட்டுமல்லாமல் அவரது சீன, தென்கொரிய பயணங்களும் மிகப்பெரிய வெற்றியில் முடிந்து, ஏராளமான முதலீட்டை இந்தியாவுக்கு ஈட்டின.  ஐரோப்பாவுடனான அவரது உறவு ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி பயணங்களின் போது சிறப்பாக வெளிப்பட்டது.  

அரேபிய நாடுகளுடன் வலுவான உறவை ஏற்படுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. 34 ஆண்டுகளில் முதன்முறையாக நிகழ்ந்த அவரது யூ.ஏ.இ பயணம் அரபு நாடுகளுடனான இந்தியாவின் பொருளாதார உறவை வலுப்படுத்தியது. ஜூலை 2015ல் ஐந்து மத்திய நாடுகளுக்கு சென்ற மோடியின் பயணம் புதிய வரலாறு படைத்தது.  ஆற்றல், வணிகம், கலாச்சாரம், பொருளாதாரம் என பலதுறைகளில் இந்நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  அக்டோபர் 2015ல் 54 ஆப்ரிக்க நாடுகள் பங்கேற்ற வரலாற்றுபூர்வமான இந்திய-ஆப்ரிக்க மாநாடு புதுதில்லியில் நடந்தது.  41 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக கலந்துகொண்டார்கள்.  இம்மாநாட்டில் இந்திய-ஆப்ரிக்க உறவு மேலும் வலுப்பட்டது.  பல ஆப்பிரிக்க தலைவர்களுடன் பிரதமர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.   


நவம்பர் 2015ல் தட்பவெப்ப மாற்றம் குறித்து பாரீசில் நடந்த COP21 மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்களுடன் பிரதமர் பங்கேற்றார்.  பிரதமர் மோடியும், ஃபிரான்ஸ் அதிபர் ஹோலாண்டும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை துவக்கிவைத்தனர்.  

ஏப்ரல் 2016ல் அணு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற மோடி அணு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உலக அரங்கில் முன்வைத்தார்.  சவுதி அரேபியாவுக்கு சென்ற மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான சவுதி அரேபிய சாஷ் விருது அப்துல்லாசிஜ் அவர்களால் வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் டோனி அபோட், சீன அதிபர் ஜிங்பின், இலங்கை அதிபர் மைத்ரி சிறீசேனா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் ஆகியோர் இந்தியா வந்து அந்நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்துவதில் பங்காற்றியிருக்கிறார்கள்.  2015 குடியரசு தினத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்தார்.  அமெரிக்க-இந்திய உறவில் இது வரலாற்றுப் பூர்வமான உறவு.  ஆகஸ்ட் 2015ல் இந்தியா ஏற்பாடு செய்த FIPIC மாநாட்டில் ஃபசிபிக் தீவுகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள்.  பசிபிக் தீவுகளுடனான இந்தியாவின் உறவைப் பற்றிய உரையாடல்கள் நடந்தன

’சர்வதேச யோகா தினம்’ என ஒரு நாளை அறிவிக்க மோடி எழுப்பிய கோரிக்கைக்கு ஐ.நாவில் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது.  மொத்தம் 177 தேசங்கள் கலந்துகொண்டு, ஜூன் 21ஐ சர்வதேச யோகா தினமாக அறிவிப்பதென தீர்மானம் இயற்றப்பட்டது.

செப்டம்பர் 17 1950ல் குஜராத்தின் நகர் ஒன்றில் பிறந்த மோடி, ஏழ்மையான ஆனால் அன்பு நிறைந்த குடும்பத்தில் வளர்ந்தார்.  ஆரம்பகால சூழல்கள் அவருக்கு கடின உழைப்பின் பயன் உள்ளிட்ட பல்வேறு பாடங்களை கற்றுக்கொடுத்தன.  அதுமட்டுமல்லாது பொதுமக்கள் படும் கஷ்டங்களையும், அதை தவிர்ப்பதற்கான முறைகளையும் அறிந்திருந்தார்.  இதன்மூலம் சிறுவயதில் இருந்தே மக்கள் சேவையில் ஈடுபடவேண்டும் என்ற அவரது ஆர்வம் அதிகரித்தது.  ஆரம்பகாலத்தில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் எனும் தேசிய இயக்கத்தில் பணியாற்றிய அவர், பிற்காலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து மாநில மற்றும் தேசிய அளவில் அரசியல் பணியாற்றத் துவங்கினார். குஜராத் பல்கலைக் கழகத்தில் அரசியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார் பிரதமர் மோடி.    

2001ல் தன் சொந்த மாநிலமான குஜராத்தில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி தொடர்ந்து நான்கு முறை முதல்வராக தேர்வுபெற்று சாதனை படைத்தார்.  பூகம்பத்தில் இருந்து மீண்டுகொண்டிருந்த குஜராத் மோடி ஆட்சியின் கீழ் பல்வேறு வளர்ச்சிகளைப் பெற்றது.  அதனூடாக இந்திய வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றியது.

“மக்கள் தலைவர்,” என போற்றப்படும் மோடி, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதிலும், அவர்கள் நலத்திலும், இன்பதுன்பங்களையும் பகிர்ந்துகொள்வதிலும் அக்கறை கொண்டவராக இருக்கிறார்.  தனிப்பட்ட முறையில் மக்களுடனான அவரது தொடர்பு அவரது இணைய செயல்பாடு சார்ந்து இருக்கிறது.  மக்களுடன் தொடர்பில் இருக்க இணையத்தை வெகுவாக பயன்படுத்தும் மோடி, தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அரசியல் தலைவராக அறியப்படுகிறார்.   ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள்+, இன்ஸ்டாகிராம், சவுண்ட்கிளவுட், லிங்க்ட்கின், வெய்போ என எல்லா சமூகவலைத்தளங்களிலும் ஆர்வமாக பங்காற்றுகிறார் மோடி

அரசியலுக்கு அப்பாற்பட்டு எழுதுவதிலும் ஆர்வமுடையவராக திகழ்கிறார் மோடி.  கவிதை நூல் உள்ளிட்ட இரண்டு நூல்களை மோடி எழுதியிருக்கிறார்.  தினத்தை  யோகாவில் துவங்கும் மோடிக்கு அவர் உடலையும், மனதையும் ஒருங்கிணைத்து பரபரப்பாக செல்லும் அவரது அன்றாட வாழ்வில் துணை புரிகிறது யோகா

துணிவின், அன்பின், நம்பகத்தன்மையின் மொத்த உருவமாகத் திகழும் மோடி இந்தியாவை உலக அரங்கில் ஒளிரச் செய்வார் என்ற நம்பிக்கையில் ஒட்டுமொத்த இந்தியாவும் தனது மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் முழுமையாக அவரிடம் ஒப்படைத்திருக்கிறது