உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் பற்றி பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார். கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசிடம் இருந்து நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். விவசாயிகளின் நலனை அடிப்படைக் கொள்கையாக தனது தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. கருதியுள்ளது என்றும், அனைத்து நிலுவைகளும் இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.