முதலமைச்சர் மற்றும் பிரதமர் பதவிகளுக்கு வரும் முன்னர் திரு. நரேந்திர மோடி புதுமைகள் படைக்கும் கள நிர்வாகியாக இருந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. உள்ளாட்சி தேர்தல்கள் தொடங்கி நாடாளுமன்ற தேர்தல்கள் வரை அவர் நிறுவனப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்

குஜராத் பா.ஜ.க. -வின்  முக்கிய உறுப்பினராக அவர் இருந்தபோது, கடந்த 1980களில் அஹமதாபாத் மாநகரட்சித் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிபெற அவரது புதுமையான நிர்வாகத் திறன்கள் காரணமாக இருந்தன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அமைப்பு முறைகளில் அவரது புதுமைகள் இரண்டு விஷயங்களின் மீது கண்ணோட்டம் கொண்டதாக இருந்தது. ஒவ்வொரு நிர்வாகிக்கும் இலக்குடன் கூடிய பணி அளிக்கும் வகையிலும் பணிகளின் மூலம் இயக்கப்படும் இலக்குகளுக்கு நிர்வாகி ஒருவர் நியமிக்கப்படும் வகையிலும் பணிகள் ஒதுக்கப்படுவது முதலாவதாகும்.  பிரச்சாரத்துடன் உணர்வுப்பூரவமான இணைப்பு உறுதிப்படுத்தப்படுவது இரண்டாவது அம்சமாகும். நகரம் மற்றும் அதன் நிர்வாகத்தின் மீது உணர்வுப்பூர்வமான உரிமையை எடுத்துக்கூறி இந்த உணர்வுப்பூர்வமான இணைப்புக்கான ஊக்கத்தை அவரால் ஏற்படுத்த முடிந்தது.

இந்தப் பிரச்சார இயக்கத்தின் போது அவரது சமூக ஏற்பாட்டின் சிறப்பு, நிர்வாகிகளுடன் நுண் ஈடுபாடு மற்றும் அகமதாபாத்தில் 1000 சமூக அளவிலான குழு சந்திப்புகள் மூலம் மக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டதாகும். இந்த சமூக அளவிலான 1000 கூட்டங்களை ஏற்பாடு செய்ய அவர் 100 கட்சி நிர்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பை நடத்தினார். சமூக அளவிலான குழுக் கூட்டங்களில் நிர்வாகிகள் என்ன செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு – உயர்த்திக் காட்டப்பட வேண்டிய பிரச்சினைகள், என்ன விவாதிக்க வேண்டும் என்பதே இந்தப் பயிற்சியின் கண்ணோட்டமாக இருந்தது.

தேர்தல் உத்தியைப் பொருத்தவரையில் இது புதுமையான மற்றும் நியாயமான நடவடிக்கையாகும்.

சமூக அளவிலான குழுக் கூட்டங்களில் 25 முதல் 30 குழுக்கள் இருக்கும் என்பதால், நகரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்துப் பேச சிறந்த பேச்சாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். இந்த நடைமுறையில் பெண்களை ஈடுபடுத்தும் வகையில் அவர் அனைத்து பெண்கள் குழு கூட்டங்களை மதியம் 2 மணிக்கு மேல் நடத்தினார். மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் பங்கேற்க அவரையும் சம்மதிக்க வைத்தார்.

கள ஏற்பாடுகளில் திரு. நரேந்திர மோடியின் அணுகுமுறையில் உள்ள தனித்தன்மை பற்றிச் சொல்ல சில உள்ளன. தன்னார்வலர் பயிற்சி, தன்னார்வலர்களிடையே உணர்வுப்பூர்வமான உள்ளூர் இணைப்பு ஆகியவை அஹமதாபாத்தில் பா.ஜ.க.  வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தி நரேந்திர மோடிக்கு உள்ளூர் அளவிலான கண்ணோட்டத்துடன் மாநில அளவில் இந்த நடைமுறையை விரிவுபடுத்தும், வாய்ப்பை அளித்தது.

இத்தகைய நுணுக்கம் பொதுச் செயலாளர் ஆன பிறகும் குஜராத்தில் மக்களவைத் தேர்தலில் மீண்டும் மீண்டும் செயல்படுத்தப்பட்டு, இறுதியாக மோடி 2001ம் ஆண்டு தேர்தல் அரசியலில் ஈடுபட்ட போதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. மக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்வது, அவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் புரிந்து கொள்ளுவது ஆகியவற்றில் அவரது திறன் உண்மையில் பயனளிப்பதாகவே அமைந்தது