குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மக்களவையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். புத்தகங்களில் வரலாறு சிறைபட்டுக் கிடந்தால் சமூகத்துக்கு உத்வேகம் அளிக்க முடியாது என்று தனது உரையின்போது பிரதமர் தெரிவித்தார். ஒவ்வொரு வயதிலும், வரலாற்றை வாழ்ந்து பார்க்கும் ஒரு முயற்சி இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ``1857-ல் சுதந்திரப் போராட்டம் பிறந்த போது காங்கிரஸ் தோன்றியிருக்காத நிலையில், மக்கள் நாட்டுக்காக தங்கள் உயிரை தந்து கொண்டிருந்தார்கள். தாமரை அன்றும் இருந்தது இன்றும் இருக்கிறது.'' என்று அவர் கூறினார்.
Login or Register to add your comment